போதையில் உளறிய கிட்டாரிஸ்ட்.. அந்த நிமிடத்தில் மனம் மாறிய ஏ.ஆர்.ரகுமான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை குழுவினரோடு சேர்ந்து வாசித்து வந்த போது கிட்டாரிஸ்ட் ஒருவர் குடி போதையில் கூறிய வார்த்தைகள் தான் அவரின் இந்த நிலைமைக்கு காரணம் என ஓபனாக கூறியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான்
தன்னுடைய இசை பயணத்தை “ரோஜா ” திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த ஏஆர் ரஹ்மானுக்கு, அந்த படம் நினைத்து பார்க்காத வெற்றியை பெற்று தந்து தேசிய விருதும் வாங்கி தந்தது.
இதனை தொடர்ந்து இவரின் பெயர் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது.
ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். ரஹ்மானுக்கு கோல்டன் க்ளோப் விருதும், இரண்டு ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தது.
ரஹ்மான் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா , மலேசியா என பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கை மாற்றியவர் யார்?
இந்த நிலையில், சமீபத்தில் அவரின் இசை பயணம் எப்போது ஆரம்பமானது என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
அதாவது, “சினிமாவில் இசையமைப்பதற்கு முன்னர் ஏராளமான இசை குழுவில் ஏ.ஆர்.ரகுமான் வாசித்துள்ளார். அந்த சமயத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை குழு நிகழ்ச்சிகளில், எப்போதும் ஏற்கனவே திரைப்படங்களில் வெளியாகி ஹிட்டான படங்களுக்கு மட்டுமே இசையமைக்கப்படும்.
இதனை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பொழுது போதையில் இருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர், “ஏற்கனவே வந்த பாடலின் இசையை தான் நீ காப்பி அடித்து கொண்டிருக்கிறாய் என்பதை புரிந்து கொள். உனக்கென தனித்துவமான ஒன்றை உருவாக்கு அப்போது தான் நீ கும்பலோடு இல்லாமல் தனித்து தெரிவாய்..” என கூறினார்.
அவரின் பேச்சை கேட்டு தான் நான் தனியாக வாசிக்க துவங்கினேன். இசையை புதிதாக உருவாக்கும் முயற்சி செய்தேன். இதனால் இவ்வளவு வெற்றிகள்..” என பேசியுள்ளார்.
இவரின் இந்த பேட்டி அவரின் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |