அறுவை சிகிச்சையின் பின்னர் நடிகை ஸ்ருதிகா வெளியிட்ட காணொளி! கணவனின் செயலை பாருங்க
நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் ஸ்ருதிகா பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை முடித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
குறித்த அறுவை சிகிச்சையின் பின்னர் தனது கணவர் தன்னை எவ்வாறு கவனித்துக்கொள்கின்றார் என்பதை நெகிழ்ச்சியுடன் தற்போது காணொளியாக வெளியிட்டுள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ருதிகா
சூர்யா ஜோடியாக ஸ்ரீ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். தன்னுடைய பள்ளி பருவத்திலேயே இவர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து விட்டார்.
தொடர்ந்து தித்திக்குதே, ஆல்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த போதிலும் இவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் தன்னுடைய ரீ என்ட்ரியை பலமாக அமைத்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் வெற்றி கொண்டார்.
அதனை தொடர்ந்து ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் கலந்துக்கொண்டு ஹிந்தி, தமிழ் என இரு தரப்பில் இருந்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின்னர் இவருக்கு ஹிந்தி மொழியிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.
குழந்தை தனமானவும் எல்லா விடயத்தையும் வெளிப்படையாகவும் பேசும் குணம் கொண்ட ஸ்ருதிகாவை முதலில் பார்ப்பவர்கள் இவர் கவனம் ஈர்ப்பதற்கு தான் இப்படி சேசுகின்றார் என நினைத்தாலும், அவரின் இயல்பே அப்படி தான் என தெரிந்த பின்னர் ரசிகள் பட்டியில் சேர்ந்து விடுவார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் ஸ்ருதிகா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் காணொளியை பகிர்ந்து ஒரு நீண்ட பதிவையும் வெளியிட்டிருக்கின்றார். இந்த காணொளி ஸ்ருதிகாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தன்னை குழந்தை போல் கவனித்துக்கொள்ளும் கணவனின் அன்பை காணொளியாக தற்போது ரசிகர்களுடன் பதிர்ந்துள்ளார்.
குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் ஸ்ருதிகா விரைவில் குணமடைய வேண்டும் என்ற வகையில் ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |