அப்போ அப்படி பேசிட்டு... முதல்வர் விஜயின் செயல் குறித்து பிக்பாஸ் முத்துக்குமரன் வீடியோ!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில், விஜயின் அரசியல் வருகையால் தான் இளைஞர்கள் அரசியல் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இது சாதாரண மாற்றம் அல்ல... என முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசிய காணொளி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

பிக்பாஸ் முத்துக்குமரன்
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் முத்துக்குமரன்.
இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இறுதி வரை பல்வேறு சவால்களை சந்தித்து டைட்டிலை வென்றார்.

இவரின் பேச்சு திறன் மற்றும் தமிழ் போசும் பாணிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இந்நிலையில்,விஜய் முதல்வராக பதவியேற்றத்தில் இருந்து ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள் குறித்து, முத்துக்குமரன் புகழ்ந்து பேசியுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |