பிக்பாஸ் வெளியேற்றத்தில் திடீர் திருப்பம்! வீட்டைவிட்டு செல்லும் ஆண் போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிழக்ச்சியில் விளையாட்டு சண்டையில் முடிவடைந்து வருகின்றது. கடந்த வாரம் பொம்மை டாஸ்க் மட்டுமின்றி இந்த வாரம் அரங்கேறிய இனிப்பு கம்பெனி டாஸ்க்கும் பயங்கர சண்டையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், மகேஸ்வரி, ராம், ஆயிஷா, தனலடசுமி, ஏடியே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.
இந்த வாரம் வெளியேறுபவர் யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ஷெரினா வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அசீம், விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, மகேஸ்வரி ஆகியோர் ஓரளவிற்கு வாக்குகள் வாங்கி டேஞ்சர் சூழ்நிலையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.
ஆனால் மகேஸ்வரி இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கடைசியாக ராம் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கின்றார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பு ப்ரொமோஷனுக்கு மட்டும் இரண்டரை லட்சும் செலவழித்துள்ளதாக கூறிய நிலையில், தற்போது இந்த வாரம் எஸ்கேப் ஆகிவிடுவோம் என்று நினைத்திருந்தார்.
ஆனால் இறுதியில் இவர் தான் வெளியேறுகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.