டபிள் எவிக்ஷன்... பிக் பாஸ் அதிரடி! கொதித்தெழுந்து வனிதா
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா கூறிய ஒரு பொய்யால் வீடே ரணகளமாக மாறி உள்ளது.
இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக பாலாஜியிடம் தொலைப்பேசிவாயிலாக பிக் பாஸ் அறிவித்தார். பிக் பாஸ் வீட்டிற்கு யாரும் விளையாட வந்த மாதிரி தெரியவில்லை, இதனால் இந்த வாரம் டபிள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறுகிறார்.
இதை கேட்டுக்கொண்ட பாலா, வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் , நீங்களே ஒருவரை ஒருவர் கலந்து பேசி, ஒருவரை இந்த வீட்டை விட்டு வெளியில் அனுப்பலாம் என்று கூறுகிறார்.
இதனால், உற்சாகமான போட்டியாளர்கள், இதுதான் சரியான நேரம் என்று வீட்டில் எதிரியாக நினைக்கும் போட்டியாளரின் பெயரை கூறுகின்றனர்.
இதை அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்த பாலா, பிக் பாஸ் அப்படி சொல்லவில்லை நான் சும்மா பிராங் பண்ணேன் என்று அசால்டாக கூறுகிறார்.
இதனால் போட்டியாளர்கள் அனைவரும் செம கடுப்பாகிவிட்டனர். மற்றவர்கள் சும்மா இருக்கலாம், ஆனால் வனிதா அக்கா சும்மா இருப்பாங்களா? யாரை கேட்டு நீ பிராங் பண்ண என்று எகுற, யாரை கேட்கணும் கேப்டன் என்றால் எல்லாவற்றையும் கேட்கணுமா? இந்த வீட்டிற்கு விளையாடத்தானே வந்தீங்க இல்ல சாப்ட்டு தூங்க வந்தீங்களா ? என்று பதிலுக்கு பாலாவும் கத்த வீடே ரணகளமாக மாறியது.
அது ஒரு புறம் இருக்க பாலா மற்றொரு புறமும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிக் பாஸ் கால் பண்ணும் போது எடுப்பதற்காக எகிறி குதித்து ஓடும் போது அருகில் இருந்த பொருள் உடைந்து விடும். இதனை பார்த்த ரசிகர்கள். மறுபடியும் ஆரம்பிச்சிட்டாய்யா... என்று நகைச்சுவையாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.