பிக்பாஸிலிருந்து வெளியேறிய திவாகரை வறுத்தெடுத்த ஜிபி முத்து.... காரணம் என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய திவாகரை ஜிபி முத்து கடுமையாக பேசியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த மாதம் 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்தது. இடையில் 4 பிரபலங்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக களமிறங்கினர்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி சில சுவாரசியத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. கடந்த ஞாயிற்று கிழமை திவாகர் எவிக்ட் ஆகிய நிலையில், இதுவரை மொத்தம் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
மீதம் 16 போட்டியாளர்கள் தற்போது விளையாடி வருகின்றனர். இதில் 13 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கின்றனர்.
இந்த வாரம் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் நகைச்சுவையாக சென்று கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களும் தனது வன்மத்தை அடக்கிக் கொண்டு காமெடியாக விளையாடி வருகின்றனர்.

திவாகரை விளாசிய ஜிபி முத்து
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நாட்களில் பெரும்பாலான நேரங்களில் கேமரா முன்பே தனது முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் திவாகர்.
இவர் வாராவாரம் விஜய் சேதுபதியிடம் சரமாரியாக பேச்சு வாங்வார். ஆனால் அதனை உடனே மறந்துவிட்டு மீண்டும் கேமரா முன்பு சென்று நடிக்க ஆரம்பித்துவிடுவார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை வெளியேறிய நிலையில், ஜிபி முத்து அவரை கடுமையாக பேசி காணொளி வெளியிட்டுள்ளார்.

ஜிபி முத்து ஒரு யூடியூப்பர் மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் வந்தார். ஆனால் வந்த ஒரு சில தினங்களில் மகனை பிரிந்து இருக்கமுடியவில்லை என வெளியே சென்றுவிட்டார்.
இவர் திவாகரைக் குறித்து பேசுகையில், தர்பூசணி உன்னை உங்கள் அண்ணன் விஜய் சேதுபதி இரண்டாக பிளந்துவிட்டாரா? வசமாக மாட்டுனியா? ஆடிய ஆட்டம் என்ன? பேசிய பேச்சு என்ன? என்று வறுத்தெடுத்துள்ளார்.
மேலும் முட்டாப்பயலே என்றும் மக்கள் ஒன்றும் சும்மாம கிடையாது... உனது நடிப்பு எல்லாம் பிசுங்கி, குசுங்கி போயிடுச்சா... இப்போ தர்பூசணியை இரண்டாக வெட்டி ரோட்டில் வியாபாரம் செய் என்று ஆதாங்கத்தை கொட்டியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |