Bigg Boss: காமெடியில் களைகட்டும் பிக்பாஸ் வீடு... அப்படியென்ன டாஸ்க் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த வீடும் காமெடியில் களைகட்டியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், உள்ளே 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் 13 போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். மேலும் வீட்டின் தலைவராக எப்ஃஜே இருக்கின்றார்.

தற்போது இந்த வார டாஸ்க்கினை பிக் பாஸ் கொடுத்துள்ளார். இதில் மூன்று அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
ஆனால் இது காமெடி விளையாட்டு என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் போட்டியாளர்கள் தங்களுக்குள் மறைந்திருந்த வில்லத்தனமான முகத்தினை மறைத்துக் கொண்டு டாஸ்க்கை செய்து வருகின்றனர்.
போட்டியாளர்கள் தற்போது செய்துவரும் காமெடியினால் ஒட்டுமொத்த வீடு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |