அம்மன் சிலை போன்று காணப்படும் திவ்யா கணேஷ்... ரசிகர்கள் எழுப்பிய கேள்வி
பிக்பாஸ் திவ்யா கணேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
நடிகை திவ்யா கணேஷ்
சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவ்வப்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் திவ்யா தற்போதும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது திவ்யா முகம்சுழிக்கும் வகையில் எந்தவொரு ஆடையும் அணியாமல் வலம்வந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான வெப் சீரிஸில் கவர்ச்சியான தோற்றத்திலும், நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் படுக்கையறை காட்சியைக் குறித்தும் கேட்ட கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கலகலப்பாக பதில் அளித்தது அதிகமாக பகிரப்பட்டது.

புதிய புகைப்படம்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற பட்டுப்புடவையில், தலை முதல் இடுப்பு வரை தங்க நகைகளால் அலங்கரித்த டிரெடிஷ்னல் லுக்கில் எடுத்த புகைப்படங்களை திவ்யா கணேஷ் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு புகைப்படத்திலும் சாமி சிலையைப் போல கம்பீரமாகவும், அதே நேரத்தில் எளிமையான புன்னகையுடனும் அவர் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இந்த புகைப்படங்களுக்கு அவர் வைத்திருக்கும் "This is an Ad shoot... Unless Destiny Has Other Plans." என்ற கேப்ஷன்தான் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.

"இது ஒரு விளம்பர படப்பிடிப்பு தான்... விதி வேறு ஏதாவது முடிவு செய்திருந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை" என்ற அர்த்தத்தில் அவர் பதிவிட்ட இந்த வரிகளை பார்த்த ரசிகர்கள், "ஹீரோயினாக வாய்ப்பு வந்தா ரெடி என்று மறைமுகமாக சொல்லிட்டீங்களா?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் சில ரசிகர்கள் இந்த அளவிற்கு நகை போட்டு காணப்படுபவதைப் பார்த்து எந்த ஜுவல்லரி இது? அம்மன் சிலை மாதிரி இருக்கீங்க... என்று பாராட்டி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |