Bigg Boss: யாரும் எதிர்பாராத டபுள் எவிக்ஷன்... வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருந்த நிலையில், சாச்சனா மற்றும் ஆனந்தி இருவரும் வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியது.
கடும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேய் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பல கலவரங்களும் அரங்கேறியது. இந்த டாஸ்கின் முதல் நாளில் ஏஞ்சல்களை பேய்கள் கொடுமைப்படுத்தியது.
குறிப்பாக மஞ்சரி, சாச்சனா ஆகியோர் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் அன்ஷிதா, பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியே செல்ல முயன்ற சம்பவமும் அரங்கேறின.
பின்னர் ஏஞ்சல்கள் பேய்களாகவும், பேய்கள் ஏஞ்சல்களாகவும் மாறி விளையாடினர். இதில் ஏஞ்சல்களின் ஹார்ட் பேட்ஜுகளை கைப்பற்றும் முனைப்பிலேயே டெவில்கள் இருந்ததால் நேற்று பெரியளவில் சண்டைகள் எதுவும் நடைபெறாமல் கமுக்கமாக டாஸ்க் நடந்து முடிந்தது.
மஞ்சரி சிறந்த போட்டியாளர்கள் என தேர்வு செய்யப்பட்டதுடன், அவருக்கு அடுத்த வாரத்திற்கான ஃப்ரீ பாஸும் கிடைத்தது. அதேபோல் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்களாக ஜாக்குலின் மற்றும் செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் உப்பில்லாத சாப்பாடை சாப்பிட வைத்து தண்டனை கொடுத்துள்ளார் பிக் பாஸ்.
டபுள் எவிக்ஷன்
பிக் பாஸில் இந்த வாரம் பிக் பாஸிலிருந்து 12 பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில் முத்துக்குமரன், செளந்தர்யா, ஜாக்குலின், ராணவ் ஆகியோர் அதிக வாக்குகளை பெறு முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்ற நிலையில், குறைவான வாக்கு பெற்ற போட்டியாளர்களான, ரயான், தர்ஷிகா, ஆனந்தி, சாச்சனா ஆகியோரில் சாச்சனா மற்றும் ஆனந்தி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வாரமே சாச்சனாவை கடைசி நிமிடத்தில் பிக் பாஸ் காப்பாற்றி சிவகுமாரை வெளியேற்றியுள்ளது என்ற சர்ச்சை எழுந்த நிலையில், இந்த வாரம் இவர்கள் இருவரும் வெளியேறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |