முடியும் தருவாயில் எதற்காக இந்த வன்மம்? பரிதவிக்கும் அர்ச்சனா
பிக் பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டி புறப்பட்டுச் சென்றாலும் பகை மட்டும் ஏன் கொட்டிக் கிடக்கின்றது என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 96 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன், விசித்ரா என 17 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 96 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ளார். இன்னும் சில தினங்களில் முடிவடையும் இந்நிகழ்ச்சியில் தற்போது பயங்கரமான வன்மம் அரங்கேறிய வருகின்றது.
முடியும் தருவாயில் எதற்காக இந்த வன்மம்? என்ற கேள்வியை மட்டுமே இன்று கேட்கத் தோன்றுகின்றது. 4 தினங்களில் வெற்றியாளரின் பெயர் தலைகீழாக மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |