அழும் நிலைக்கு சென்ற அசீம், தனலட்சுமி! பிக்பாஸ் வைத்த ஆப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மக்களுக்கு பிடித்த பிரபலமாக மாறி போட்டியாளர்கள் கலக்கி வருகின்றனர்.
பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிக்கான போட்டி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடைபெறும் டாஸ்க் மற்றும் சண்டைகள் மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாரா வாரம் மக்களால் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் குயின்ஸி மக்களால் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளது. இதில் மக்களுக்கு பிடித்த பிரபலங்களாக போட்டியாளர்கள் மாறியுள்ளனர்.
தற்போது நடைபெறும் போட்டியில் தகுதி பெறும் போட்டியாளர்கள் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால் நடிப்பு திறமையில் கலக்கி வருகின்றனர்.
