நான் ஏழையே இல்லடா.. மீண்டும் முற்றிய ஜோவிகா - பிரதீப் மோதல்: குறும்படத்தில் சிக்கிய அந்தவொரு வார்த்தை!
“ நான் ஏழையே இல்லடா..” என ஜோவிகா - பிரதீப் இருவரும் வீட்டில் கடுமையாக வாதிட்டு கொண்டார்கள்.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசன் ஆரம்பித்து கொளுந்து விட்டு எறிந்து கொண்டிருக்கின்றது.
இதில் ஏகப்பட்ட சின்னத்திரை பிரபலங்களும், மீடியாப்பிரபலங்களும், பிரபலங்களின் குழந்தைகள் என 15 போட்டியாளர்கள் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை பிக்பாஸ் வீட்டில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் முதல் இடத்தில் பிரதீப் நிற்கிறார். அந்த இடத்தை விட்டு நகராமல் பிரதீப் பேச்சு கொடுக்கிறார். ஆனால் அந்த இடம் தனக்கு வேண்டும் என்கிறார் ஜோவிகா.
இந்த நிலையில் இருவரும் நன்றாக பேசக்கூடியவர்கள் ஆரம்பத்தில் சத்தம் இல்லாமல் ஆரம்பித்த வாதம் கொஞ்சம் கொஞ்சமாக முற்ற ஆரம்பித்து விட்டது.
எல்லை மீறிய வாதம்
அதில் பிரதீப், ஒரு மிடில் கிளாஸ் விதத்தில் வளர்ந்தேன் என்று தான் சொல்றேன் என ஜோவிகா கூறியதை கேட்டு You cant manipulate public. நான் மிடில் கிளாஸில் இருந்து வந்தேனு பேசாத என சீறினார் பிரதீப்.
இதனை தொடர்ந்து உச்சக்கட்ட கடுப்பில் “ நீ ஏழைனா என பிரதீப் ஆரம்பிக்க, நான் ஏழையே இல்லடா” என ஜோவிகா கத்தியுள்ளார். இவர்கள் ரேட்டிங்கிற்காக அடித்து கொள்ளாமல் ஏழை- பணக்காரர் என அடித்து கொள்கிறார்.
பிரதீப் மக்களின் ஆதரவை சம்பாரிப்பதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறாரா? என மக்கள் குழம்பு வகையில் வாதம் ஏறிக் கொண்டே சென்றது. கடைசியில் குடும்ப பிரச்சினையாக சென்றதும், மற்ற போட்டியாளர்கள் வாதத்தினுள் வர ஆரம்பித்து விட்டார்கள்.
கோபம் பொறுக்காமல் பிரதீப் கை முறுக்க ஆரம்பித்து விட்டார். இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் குறும்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இவர்கள் இருவரும் கடைசி வரை வீட்டிற்குள் இருப்பார்கள்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |