புதுசா மாடு வாங்கிருக்கோம்! பிக்பாஸ் பாலா வெளியிட்ட அசத்தல் காட்சி
பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் புதுசா மாடு வாங்கிருக்கோம் என்ற குரலுடன் தான் வாங்கிய புதிய காரின் காணொளியினை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
பிக்பாஸ் பாலாஜி
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ்.
இவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றியை நூல் இழையில் தவறவிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தாலும் அதற்கு பின்னர் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று டைடில் வின்னர் என்ற பெருமையை பெற்றார்.
இவர் சமூக வலைதளத்தில் எப்போதும் பல்வேறு பதிவுகளை போட்டு வருவது வழக்கம்.

புதிய கார் வாங்கிய பாலாஜி
அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதனை சமூக வலைதளத்தில் புதுசா மாடு வாங்கிருக்கோம் என்று கேப்சன் போட்டதுடன், வீடியோவிலும் புதுசா மாடு வாங்கிருக்கோம் என்ற ஆடியோவையும் இணைத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.