மக்களிடம் மன்னிப்பு கேட்ட அசீம்! பரிசுத்தொகையை என்ன செய்ய போகிறார்? அவரே அளித்த விளக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அசீம் தனது இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றினை பதிவிட்டு, அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அசீம்
பிரபல ரிவியில் 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுகிழமை கோலாகலமாக முடிந்துள்ளது. இதில் வெற்றியாளராக அசீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முதன் ரன்னராக விக்ரமனும், இரண்டாவது ரன்னராக ஷிவினும் தெரிவு செய்யப்பட்டனர். பிக்பாஸ் இந்த சீசனில் அசீம் தான் அதிக முறை நாமினேட் செய்யப்பட்டது மட்டுமின்றி அத்தனை தடவையும் மக்களால் முதல் ஆளாகவும் காப்பாற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது பயங்கர கோபமாகவும், வாயில் வந்த வார்த்தையினை எந்தவொரு யோசனையும் இன்றி வெளிப்படையாக பேசிவிடவும் செய்ததால் அதிகமான கெட்ட பெயர் வாங்கியதோடு, கமல்ஹாசனிடம் எச்சரிக்கையும் பெற்றார்.
தற்போது பிக்பாஸ் முடிந்து இரண்டு தினங்கள் ஆகியும் மக்களுக்கு நன்றி கூறி ஒரு காணொளி கூட போடாமல் இருந்ததால், அதற்கு மன்னிப்பு கேட்டதுடன், எதனால் காணொளி வெளியிடவில்லை என்ற காரணத்தையும் கூறியுள்ளார்.
பரிசு தொகையை என்ன செய்கிறார்?
பிக்பாஸ் வீட்டில் 50 லட்சம் ரூபாய் பணமும், ஒரு காரும் பரிசாக அசீமிற்கு கிடைத்தது. இதில் அமுதவானன் மற்றும் கதிரவன் எடுத்துச் சென்ற 14 லட்சம் ரூபாய் அசீமிற்கு கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையில் எடுக்கப்படுவதுடன், பிடித்தம் போக 30 லட்சத்திற்குள் தான் கையில் கிடைக்கும் என்று கூறப்ட்டது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அசீம் பரிசு பணம் தனக்கு தேவைப்படுவதாகவும், இந்த பணத்தில் கொரோனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்க உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் தான் வாங்கிய பரிசு தொகையை வாக்களித்தது போன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்க உள்ளதாகவும் கேப்ஷனில் எழுதியுள்ளார். தற்போது அவர் குறித்த கேப்ஷனுடன் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட காணொளியினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.