பணத்திற்காக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அநியாயம்! புலம்பும் இலங்கை பெண்
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மக்களுக்கு பிடித்த பிரபலங்களாக மாறி மக்களை மகிழ்வித்துவருகின்றனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் குயின்ஸி மக்களால் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் அதிகமாக போட்டியாளர்களிடையே சண்டையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வாரம் சற்று நகைச்சுவையுடன் சென்று கொண்டிருக்கின்றது.
உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சில பிரபலங்களாக மாறியுள்ளதுடன், அவர்களைப் போன்று நடை, உடை, பாவனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஆயிஷா நடிகர் சிம்புவைப் போன்று கலக்கி வருகின்றார். வடிவேலுவாக தனலட்சுமி செம்ம கொமடி செய்து வருகின்றார்.
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் பணத்திற்காக மற்றவர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளமுடியாது என்று இலங்கை பெண் ஜனனியிடம் தனலட்சுமி புலம்பியுள்ளார்.