காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை கசிய விட்ட பிக்பாஸ் பிரபலம்!
பிக் பாஸ் பிரபலமும், சின்னத்திரை நடிகையுமான நடிகை ஆயிஷா அவருடைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சின்னத்திரைக்கு அறிமுகம்
சின்னத்திரையில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளின் ஒருவரான நடிகை ஆயிஷா, முதன் முதலாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பொன்மகள் வந்தாள்” என்ற சீரியலில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சீரியல் இயக்குநருடன் ஏற்பட்ட சின்ன பிரச்சினைக் காரணமாக சீரியலை விட்டு இடையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் மாயா என்ற சீரியலிலும் நடித்தார். ஆனால் இந்த சீரியல் அவருக்கென ஒரு இடத்தை கொடுக்கவில்லை. மூன்றாவது சீரியலாக மற்றுமொரு தொலைக்காட்சியில் “சத்யா” சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார்.
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்த ஆயிஷா, வீட்டிற்கு சென்று முதல் வாரத்திலே அசல் கோளாறுவுடன் சண்டையிட்டுக் கொண்டு, மனமுடைந்து “பிக் பாஸை விட்டு போக வேண்டும்” என அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.
இவரின் நடவடிக்கை இயல்பானதாக இருந்தாலும், சக போட்டியாளராக வந்த பிரபலங்கள் பிடிக்கவில்லை. இதனால் ஆயிஷாவை சில இடங்களில் மட்டம் தட்டியுள்ளார்கள். இதனை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் “பிக் பாஸ் ஓவியாவை போல் முயற்சி செய்கிறார் ஆயிஷா” என கலாய்த்து வந்தார்கள்.
இதனை தொடர்ந்து மனம் மாறி பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்து, ராமுடன் சேர்ந்து கமரா முன் நின்று அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை பார்த்து மக்கள் அந்த வாரமே டபுள் எவிக்ஷனில் குறைவான வாக்குகள் கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போது. பல சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர் பல தொலைக்காட்சி பேட்டிகளில் கலந்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது ஒரு ஆணை கட்டிபிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் மூலம் விரைவில் இவர்களுக்கான திருமணம் குறித்து தொலைக்காட்சிகளுக்கு அறிவிப்பார் என சின்னத்திரை வட்டாரங்கள் கூறுகின்றது.
மேலும் இவர் பிக் பாஸ் செல்லும் முன்னரே இவர் மேல் நெற்றியில் குங்குமம் வைத்து புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். இதன்போதே திருமணம் குறித்து பேசுவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்போது பேசாத நிலையில், தற்போது இவர் காதலனுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் வரை ஆயிஷா இருந்திருந்தால் கண்டிப்பாக இவரின் காதலனை பார்த்திருக்கலாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.