கருங்கற்களுக்குள் புடவையில் உலாவும் ஆயிஷா.. குவியும் லைக்ஸ்
கடற்கரை கற்களுக்கு நடுவில் புடவையை விரித்து விட்டு போஸ்க் கொடுத்த ஆயிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் ஆயிஷா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சத்யா” சீரியலில் நடித்து பிரபல்யமாகியவர் தான் ஆயிஷா.
இதனை தொடர்ந்து பல சீரியல்கள் நடித்தாலும் சத்யா சீரியல் போல் வரவில்லை.
அதன் பின்னர் ஆயிஷாவிற்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் காதலர் தினத்தன்று தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த புகைப்படங்களை தொடர்ந்து நிச்சியதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து காதலர்கள் தின சப்ரைஸ் காட்சிகளையும் அவரின் சமூக வலைத்தளங்களில் நேரலையில் காட்டியிருந்தார்.
கடற்கரையில் காற்று வாங்கும் ஆயிஷா
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா, அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பகிர்வது வழக்கம்.
அந்த வகையில்,யாரும் இல்லாத கடற்கரையில் கருங்கற்களுக்கு நடுவில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கருங்கற்களுக்கு நடுவில் ஒரு அழகிய தேவதை போன்று காட்சிக் கொடுக்கும் ஆயிஷாவின் பதிவிற்கு நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அத்துடன், “ எப்படியொரு அழகு..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
