காதலருக்கு ப்ரொபோஸ் செய்த பிக்பாஸ் பிரபலம்: வைரலாகும் க்யூட்டான புகைப்படம்!
ப்ரோபோஸ் தினத்தில் தனது காதலருக்கு ப்ரோபோஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் பிக்பாஸ் பிரபலம் ஆயிஷா.
பிக்பாஸ் ஆயிஷா
பிரபல தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தான் ஆயிஷா, இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குச் சென்றார்.
பிக்பாஸ் வீட்டிற்கு சென்று முதல் வாரத்திலே அசல் கோளாறுவுடன் சண்டையிட்டுக் கொண்டு, மனமுடைந்து “பிக் பாஸை விட்டு போக வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சுமார் 60 நாட்களுக்கு மேல் இருந்து குறைவான வாக்குகளால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருந்தார்.
காதலன்
அண்மையில் கூட தனது காதலனை கட்டிப்பிடித்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் அந்தப் புகைப்படத்தில் காதலன் யார் என்பதை அறிவிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் ஆயிஷா காதலர்கள் தினத்தை முன்னிட்டு அந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு தினத்தைச் சொல்லி கொண்டாடி வருவார்கள்.
அதில் பெப்ரவரி 8ஆம் திகதி கொண்டாடப்படும் ப்ரோபோஸ் தினத்தில் காதலருக்கு வெட்கத்துடன் ப்ரோபோஸ் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் இன்று ஏதோ ப்ரோப்போஸ் தினமாமே என தலைப்பிட்டு பதிவிட்டிருந்தார்.