சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள்
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கும், அர்ச்சனாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
அருண் - அர்ச்சனா
சின்னத்திரைகளில் நிகழ்ச்சிகளில், சீரியல்களில் சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காலப்போக்கில் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
இந்த வரிசையில், பிக்பாஸ் பிரபலங்களான அருண் - அர்ச்சனா காதலித்து வந்தனர். அருண் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர், ராஜா ராணி, கனா காணும் காலங்கள் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.
அதன் பின்னர், பிக்பாஸ் 8-வது சீசனில் கலந்துகொண்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற அருணிற்காக முதல் சீசனிலில் டைட்டில் வின்னராக தெரிவான அர்ச்சனா நண்பர் என அவரின் ஆதரவை வழங்கி வந்தார். அப்போது தான் ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என உறுதிப்படுத்தினார்கள்.
நிச்சயதார்த்தம் முடிந்தது
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அருண்- அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக பகிர்ந்துள்ளனர்.
அந்த பதிவில், “இரண்டு ஆன்மாக்கள்.. ஒரே இதயம்.. எல்லையில்லா அன்பு. என்னவளை கண்டறிந்துவிட்டேன். எங்களின் பயணம் தொடங்கியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தம்பதிகளாக தன்னுடைய வாழ்க்கையை தொடரும் அருண்- அர்ச்சனாவுக்கு இணையவாசிகள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |