குறும்படத்தில் வசமாக சிக்கிய அருண்- பிக்பாஸ் அலப்பறையால் கடுப்பான காதலி
பிக்பாஸ் அருண், அங்குள்ள பெண் போட்டியாளர் ஒருவரிம் காதல் வசனங்கள் பேசிய காணொளியை பார்த்த அர்ச்சனா என்ன பதில் கூறினார் என பேசிய காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக சென்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
கடந்த எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இனிவரும் சீசன்களும் அதே தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியது.
இது ஒரு புறம் இருக்கையில், சீசன் 8-ல் முக்கிய போட்டியாளராக இருந்த அருண், சின்னத்திரை நடிகை அர்ச்சனாவை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
வசமாக சிக்கிய அருண்
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அருண் இருக்கும் பொழுது இருவரும் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதனை வெளிப்படையாக கூறியுள்ளனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த அருண் பிரபல சேனல் ஒன்றிற்கு காதலியுடன் சேர்ந்து பேட்டிக் கொடுத்திருந்தார்.
அதில், அங்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் பெண் போட்டியாளரிடம் காதல் வசனங்கள் பேசியது போன்ற காணொளியொன்று இணையவாசிகள் வைரலாக்கி வந்தனர்.
அதனை போட்டுக் காட்டிய தொகுப்பாளர், இதனை பார்த்த பின்னர் அர்ச்சனாவின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? என கேட்க, அதற்கு அருண் சிறு பதற்றத்துடன் “அது டாஸ்க்கிற்காக பண்ணது. வேறு ஒன்றும் இல்லை” எனக் கூறினார். அத்துடன் “அதற்கு ஏற்றவைகளை நான் வெளியில் வந்தவுடன் வாங்கி விட்டேன்..”என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பதிலளித்த அர்ச்சனா,“ அருணின் காதலி யார் என்பதனை சில நாட்கள் கூறாமல் இருந்தார். அதனை பார்க்கும் பொழுது கடுப்பாக இருந்தது...”எனக் கூறினார்.
இப்படியாக இருவரும் அவர்களிடம் இருக்கும் காதலை அந்த பேட்டியில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியிருந்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |