Bathroom Tour என கலாய்த்த இளைஞருக்கு வார்த்தையால் மரண அடி கொடுத்த அர்ச்சனா!
கல்லுாரி விழாவில் தொகுப்பாளினி அர்ச்சனா பேச ஆரம்பிக்கும் போது, பாத்ரூம் டூர் என இளைஞர் ஒருவர் கலாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுப்பாளினியாக அறிமுகம்
பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் அர்ச்சனா ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தான் பணியாற்றி வந்தார்.
முதன் முதலில் “காமெடி டைம்” மற்றும் “இளமை புதுமை” போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ள அர்ச்சனா தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகமான ரீச்சைக் கொடுத்தது.
இதனால் இவரை சிலர் அச்சு மா என்ற செல்லப் பெயர் வைத்தும் அழைத்து வந்தார்கள்.
இந்நிலையில் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் மீடியாத்துறையில் விலகியிருந்தார்.
தொடர்ந்து ரீ என்றி கொடுக்கும் விதமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். இவர் தொகுப்பாளினி மட்டுமல்ல சிறந்த என்டர்டைனராகவும் மாறினார்.
bathroom tour வீடியோ போட்டு அசிங்கப்பட்ட அச்சுமா
அந்த வகையில் அர்ச்சனா ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் மகளுடன் சேர்ந்து bathroom tour வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ மக்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அர்ச்சனா ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றிருந்தார்.
அதில் இவர் பேச ஆரம்பிக்கும் போது ‘Wow life nu sonnathum” இதன் போது ஒருவர் எழும்பி “ bathroom tour” எனக் கலாய்த்துள்ளார். இதனை கேட்ட அர்ச்சனா சற்று ஆவேசமடைந்து, “பாத்ரூம் காண்பிப்பது தவறு கிடையாது. உன் பாத்ரூம் காட்டுகிற நிலையில் இருந்தால் கண்டிப்பாக காட்டலாம் என்று கற்றுக் கொடுத்தது எனக்கு இந்த கல்லூரி தான்.
மேலும், நான் பாத்ரூம் காண்பித்ததை பற்றி அசிங்கப்பட்டது கிடையாது. நான் எப்படி மலம் அழிக்கிறேன் என்பதை காண்பிக்கவில்லை. நான் பாத்ரூமில் எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதைத்தான் காண்பித்தேன்.
என்னுடைய வீட்டில் படுக்கையறையுடன் பாத்ரூம் இருக்கிறது. அதனை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை தான் காட்டினேன். இது பல அசிங்ககளை கடந்து தான் சிங்கப் பெண்ணாக நிற்கிறேன் ” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் ,“ ட்ரோல் செய்த இளைஞனுக்கு சரியான அடி” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
#VjArchana Replied To Student Who Troll Her Bathroom Tour pic.twitter.com/oTus0hPcww
— chettyrajubhai (@chettyrajubhai) February 10, 2023