உப்புக்கறை படிந்த பாத்ரூமை சுத்தம் சட்டென செய்யனுமா? கீழே தூக்கிப் போடும் இந்த ஒரு பொருள் மட்டும் போதும்
பொதுவாக நாம் என்னத்தான் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் இந்த பாத்ரூம், டாய்லெட், சிங்க் போன்ற இடங்களில் உப்புக்கறை படிந்து விடும்.
இதற்காக என்னத்தான் செயற்கை பொருட்கள் கொண்டு சுத்தம் செய்தாலும் இதனை எளிதில் நீக்குவது சுலபமான காரியம் இல்லை.
கிருமிகள் அதிகம் உருவாகக்கூடிய இடங்களும் இவை தான். எனவே இவற்றை சுத்தமாக வைத்து கொள்வது அவசியமானதாகும்.
அந்தவகையில் இதுபோன்ற உப்புகறையை எளியவழிகள் சில உள்ளன.
முட்டை ஓடு
இந்த கறையை போக்க முட்டை ஓடு பெரிதும் உதவுகின்றது. பயன்படுத்திய பிற,கு தேவையில்லை என்று தூக்கிப் போடும் முட்டை ஓடுகளை கொஞ்சம் எடுத்து கொண்டாலே போதும். அந்தவகையில் உப்புகறையை நீக்க இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
image - Getty Images
செய்முறை
- முட்டை ஓடுகளை கொஞ்சம் எடுத்து ஒரு முழு பூண்டை தோல் உரிக்காமல் காம்பு மட்டும் எடுத்து விட்டு இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
- இது மை போல அரைபடாது கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும். அரைத்த பேஸ்ட்டை ஒரு குவளையில் மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
- இதை உங்கள் வீட்டில் டாய்லெட், பாத்ரூம், சிங்க்,உப்பு கறை படிந்த இடத்தில் எல்லாம் இந்த பேஸ்ட்டை முதலில் லேசாக தேய்த்து விடுங்கள்.
- தேய்க்கும் போது கைகளில் பயன்படுத்தாமல் ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். ஸ்டில்ஸ் ரப்பர் பயன்படுத்த வேண்டாம்.
- பத்து நிமிடம் இந்த பேஸ்ட் அந்த கறைகளில் நன்றாக ஊறி இருக்கட்டும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் பாத்ரூம் தேய்க்க பயன்படுத்தும் பிரஷை வைத்து லேசாக தேய்த்தாலே போதும்.
- அதிகமாக அழுத்தி தேய்க்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. உப்புக் கறைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
குறிப்பு
இந்தக் குறிப்பில் முட்டை ஓட்டிற்கு பதிலாக பேக்கிங் சோடாவை சேர்த்து இந்த பேஸ்ட்டை தயாரித்துக் கொள்ளலாம். அதுவும் நல்ல பலனையை கொடுக்கும்.