Bigg Boss: சௌந்தர்யா நீங்க கலங்காத... உள்ளே வந்த அன்ஷிதா உடைத்த உண்மை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் வந்த அன்ஷிதா சௌந்தர்யாவைக் கட்டியணைத்து ஆறுதல் கூறிய காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 4 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இவர்களுடன் பழைய போட்டியாளர்களும் வெளியே இருந்து வீட்டிற்குள் வந்து, சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுனிதா உள்ளே வந்ததிலிருந்து சௌந்தர்யாவை குறிவைத்து பேசி வருகின்றார். இந்நிலையில் இன்று அன்ஷிதா உள்ளே வந்துள்ள நிலையில், சௌந்தர்யாவைக் கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
நீ கவலைப்படாதே... உள்ளேயே ஒரு பிஆர்ஓ டீம் வேலை செய்துட்டு இருக்குது.... அது முத்துவிற்கு என்று கூறியுள்ளார். ரவீந்தர் உள்ளே சென்று முத்து வெற்றி பெற வேண்டும் என்று சில வேலைகளை செய்து வருவதை கூறியதையடுத்து, முத்து ரவீந்தரிடம் தனக்காக எதுவும் செய்ய வேண்டாம் என்று ரவீந்தரைக் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |