Bigg Boss: சிறுவயதில் பிரிந்து சென்ற பெற்றோர்.... வாழ்க்கையை உடைத்த சோசியல் மீடியா! கண்ணீரில் அன்ஷிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த கதையை கூறும் டாஸ்க் ஒன்றினை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், கடைசியாக தர்ஷா வெளியேற்றப்பட்டார். நான்காவது வாரம் நாமினேஷன் இல்லை என்று பிக் பாஸ் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் தற்போது உள்ளே 21 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இதில் இந்த வாரத்திற்கு ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, ஆனந்தி, அன்ஷிதா, சுனிதா என 11 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சியில், கடந்த வந்த பாதையை குறித்து போட்டியாளர் கூறும் டாஸ்க்கை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
இதில் தற்போது அன்ஷிதா பேசியுள்ளார். இவர் கடந்து வந்த நிகழ்வு சக போட்டியாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |