லியோ படத்தில் நடித்து உச்சத்திற்கு சென்ற ஜனனியின் ரியாக்ஷன்: வைரலாகும் பதிவு
நடிகை ஜனனி லியோ படத்தில் நடித்திருந்த நிலையில், இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
லியோ
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
அதுமட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்து வரும் நிலையில், இப்படத்தில் பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமான ஜனனியும் நடித்துள்ளார்.
வெளியான 6 நாட்களில் 250 கோடிக்கும் மேல் வசூலை பெற்று வரும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது விஜய்யுடன் நடித்த ஜனனியின் நடிப்பை அவதானித்த ரசிகர்கள் அவரை பாராட்டியதுடன், அவரின் இயல்பான நடிப்பினால் பிரமிப்பில் ஆழ்ந்தும் உள்ளனர்.
இந்நிலையில் ஜனனி தனது இன்ஸ்டா பதிவில் வெளியிட்ட பதிவு ஒன்றில், லியோ படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்து, காபி அருந்துவது போன்று புகைப்படததையும் வெளியிட்டுள்ளார்.