இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான பிக்பாஸ் வின்னர்... வெளியான அசத்தல் புகைப்படம்
பிக்பாஸ் சீசன் 1ன் வின்னரான ஆரவ் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பிக்பாஸ் ஆரவ்
பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றவர் தான் தொழிலதிபரும், மாடலுமான ஆரவ்.
இவர் பிக்பாஸ் வீட்டில் ஓவியாவைக் காதலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஓவியாவிற்கு கொடுத்த முத்தத்தினை மருத்துவ முத்தம் என்றும் பெயர் வைத்தார்.
கடந்த 2020ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான நடிகை ராஹேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு இந்த தம்பிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருந்துள்ளார்.
இரண்டாவது பிறந்த பெண் குழந்தை
இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ஆரவ் வெளியிட்ட பதிவில், எங்கள் விலைமதிப்பில்லாத குட்டி இளவரசியை உலகிற்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி... எங்களது ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், தற்போது எங்களுடைய பெண் குழந்தையுடன் அழகான பயணத்தை தொடங்குவதாகவும், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |