வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE
பிக்பாஸ் சீசன் 9 இன் டைட்டில் வின்னர் திவ்யா கனேஷ் விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், பிக்பாஸ் டைட்டிலிலை வென்றது முதல் விஜே பார்வதி ரெட் கார்டு பெற்ற டாஸ்க் வரையில் பல விடயங்கள் பற்றி வெளிப்படையாக பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்றது.

பிக்பாஸ் சீசன் 9 கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பினாலேயுடன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராக திவ்யா கனேஷ் அறிவிக்கப்பட்டார்.
அவர் வெற்றி பெற்றது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதன் மூலம் பரிசுத்தொகை 50 லட்சம், விக்டோரிஸ் கார் என மொத்தம் 90 லட்சம் ரூபாய்வரை சம்பாதித்திருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் அவரது கரியர் மேற்கொண்டு உயரம் செல்லலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற பிறகு முதன்முறையாக விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கிய exclusive LIVE காணொளி தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |