வாட்டர் மெலன் ஸ்டாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிருச்சா? வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இடம் பெற்றிருந்த திவாகர், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிறேற்றப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து இவருக்கு திருமணமானதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் -9
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.

சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்நிநிலையில் கடந்த வார இறுதியில் வாட்டர்மெலன் ஸ்டாராக அழைக்கப்படும் திவாகர் வெளியேறினார்.
[HHKJ4 ]
அவர் வெளியேறியதில் இருந்து பல்வேறு செய்தி தளங்களுக்கு பேட்டியும் கொடுத்து வருகின்றார். அதனால் அண்மை காலமாக இணையத்தில் ட்ரெண்டிங் பட்டியலில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இடம்பிடித்து வருகின்றார்.
திருமணம் ஆகிவிட்டா?
தொழில் ரீதியாக தன்னை ஒரு மருத்துவர் என்று சொல்லும் திவாகர், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியலும் ஒரு சில பேட்டிகளிலும் குறிப்பிட்ருக்கின்றார்.
ஆனால், இப்போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் அவர் மணக்கோலத்தில் இருப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.

திவாகர், இதுவரை எந்த இடத்திலும் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என கூறியதில்லை. இந்நிலையில், குறித்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவலும் வெளிவராத நிலையில், குறித்த புகைப்படம் இணையத்தில் அசுர வேகத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.