Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி திவ்யா செய்த செயலைக் கண்டித்து கடுமையாக பேசியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் மட்டும் 13 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர்.
வீட்டின் தலைவராக இந்த வாரம் எப்ஃஜே இருக்கும் நிலையில், இந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்க் ஆரம்ப கட்டத்தில் மிகவும் சிரிப்பாகவே சென்று கொண்டிருந்தது.

இந்த வாரம் டாஸ்க் சரியாக செய்யாத நபராக சாண்ட்ரா மற்றும் திவ்யா இருவரையும் ஜெயிலுக்கு அனுப்பிய நிலையில், இன்று விஜய் சேதுபதி கடந்த நாட்களில் நடந்த சம்பவத்தை குறித்து விவாதிக்கின்றார்.
இதில் சாண்ட்ராவை கேள்வி எழுப்பிய நிலையில், அவர் தான் வேலை செய்ததாக கூறி எஸ்கேப் ஆகினார். மேலும் திவ்யாவையும் விடாமல் திட்டித் தீர்த்த விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் நான் உங்ககிட்ட பேசலை.... கொடுத்து வேலையை பார்க்க வக்கில்ல... உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு ஒன்றுமில்லை என்று பேசியுள்ளார்.
இதுவரை அனைத்து போட்டியாளர்களிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்த திவ்யாவிற்கு சரியான பாடத்தை கற்பித்துள்ளார் விஜய் சேதுபதி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |