பாரு மீது சரமாரியாக குற்றச்சாட்டை வைத்த போட்டியாளர்கள்... கோபத்தில் விஜய் சேதுபதி
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பாரு மீது அதிரடியான பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்..
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது. சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார். அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷனில் அதிகமான போட்டியாளர்களால் பார்வதி நாமினேஷன் செய்யப்பட்டார். அதன் பின்னர், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், கம்ருதீன், சபரி, அரோரா, எஃப் ஜே, அப்சரா, ரம்யா ஜோ, கெமி என மொத்தம் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டார்கள்.
எனக்கு நீங்க சொல்லி தராதீங்க
இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரங்களில் நான் பெரிய ஆள் என பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் விஜய் சேதுபதி வறுத்தெடுத்துள்ளார்.
இதில் பாரு மீது சக போட்டியாளர்கள் அதிகமான குற்றச்சாட்டை வைத்துள்ளனர். துஷார் பாரு தன்னை ஒரு ஆய்வகத்தின் எலியாக நினைப்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளார்.
இவரை போன்று இந்த வாரம் ஆட்டம் காட்டிய பிரபலங்களை விழி பிதுங்கும் அளவுக்கு கேள்வி கேட்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |