Bigg Boss: அரங்கம் அதிரும் கிராண்ட் பினாலே.. டைட்டில் வின்னர் இவரா? வெளியான தகவல்
பிக் பாஸ் 9ம் சீசன் இன்றோடு நிறைவு பெறுகிறது. அதில் பைனலிஸ்ட் ஆக சபரி, திவ்யா கணேஷ், அரோரா மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் இருக்கின்ற நிலையில், யார் டைட்டில் வின்னர் என்ற செய்தி தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 9
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது. இந்த சீசன் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ரசிகர்கர் மத்தியில் யார் வெற்றியாளர் என்ற எதிர்ப்பார்ப்பு வலுத்து வருகின்றது.

பிக்பாஸில் ரெட்காட் வாங்கி வெளியேறிய பார்வதி மற்றும், கம்ருதீன் தவிர வெளியேற்றப்பட்ட மற்ற அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

பைனல் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் சனிக்கிழமை இரவில் இருந்தே தொடங்கியுள்ள நிலையில், அதில் முன்னாள் போட்டியாளர்கள் performance மட்டுமின்றி விஜய் சேதுபதி ஒவ்வொரு எலிமினேஷன் ஆக அறிவிக்க தொடங்கினார்.

இந்நிலையில் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. அப்போது நான்காவது இடத்தை விக்கல்ஸ் விக்ரமும், மூன்றாவது இடத்தை அரோராவும் பிடித்ததாக அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் இரண்டாவது இடத்தை சபரிநாதனும், முதல் இடத்தை பெற்று டைட்டில் வின்னராக திவ்யா கணேஷும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் மக்கள் செலுத்திய வாக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |