டைட்டில் வின்னர் வாய்ப்பை இழந்த பிரபலம்- இந்த வாரம் இவர் தான் போவாராம்..லீக்கான லிஸ்ட்
டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்த முக்கிய போட்டியாளர் குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன், துஷார் மற்றும் பிரவீன் ஆகியோர் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழைந்துள்ளனர்.
இந்த வாரம் வெளியேறுபவர் யார்?
இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனெனின் துஷார் வெளியே வந்த பின்னர் அரோரா அதிகமான மன உளைச்சலால் புலம்பிக் கொண்டிருந்தார்.
சில சமயங்களில் அரோரா வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படியொரு சமயத்தில், இந்த வாரம் வெளியேறப்போவரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி, வாக்குக்கள் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த வாரம் ரம்யா ஜோ வெளியேற வாய்ப்பு உள்ளது. இவர் இல்லாவிட்டால் சுபிக்ஷா வெளியேறுவார்.
இன்றைய தினம் வாக்குக்களில் உள்ள போட்டியாளர்கள் தான் வெளியேறுவார்கள் என சொல்ல முடியாத நாளை காலை கூட மாற்றம் ஏற்படலாம். ஆனால் வியானா, சுபிக்ஷா, ரம்யா ஜோ இவர்களில் ஒருவர் வெளியேறுவது உறுதி. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |