Bigg Boss: பிக்பாஸ் எவிக்ஷன் நியாயமாக நடக்கவில்லையா? வெளியேறிய ப்ரஜன் வெளியிட்ட முதல் காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியேறிய ப்ரஜன் தனது முதல் காணொளியினை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் பல சுவாரசியம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக அமித் பார்கவ் இருந்துவருகின்றார். கடந்த வாரம் யாரும் எதிர்பாராத நிலையில் ப்ரஜன் வெளியேற்றப்பட்டார்.

இவர் வெளியேற்றத்தினால் அவரது மனைவி சாண்ட்ரா பயங்கரமாக கதறி அழுதார். பின்பு விஜய் சேதுபதியுடன் சேர்ந்த சில காமெடிகளை செய்து மனைவியை சிரிக்க வைக்க முயற்சித்தார்.
இந்நிலையில் ப்ரஜன் தனது முதல் காணொளியினை வெளியிட்டுள்ளார். இக்காட்சியில் தனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியைக் கூறியுள்ளார்.
மேலும் தான் எவிக்ட் ஆனது நியாயமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு வெளிப்படையாக பதிலளிக்காத ப்ரஜன் தனது எவிக்ஷன் நியாயமில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |