பிக்பாஸில் அதிரடியாக கிளம்பிய சண்டை.. வெளியில் வரும் எப். ஜேவின் உண்மை முகம்
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம் மாஸ்க் எடுக்கும் டாஸ்க்கில் வெளியில் வர ஆரம்பித்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
வெளியில் வரும் எப். ஜேவின் உண்மை முகம்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் முடிந்துள்ளது. அதிகமான போட்டியாளர்களால் பார்வதி நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
மாஸ்க்கை எடுத்து உரிய பெட்டியில் வைக்கும் டாஸ்க் இரண்டாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் வேகமாக ஓடிய போட்டியாளர்களை தடுக்கும் முயற்சியில் சில போட்டியாளர்கள் ஈடுப்பட்டார்கள். போட்டி முடிவில் கானா வினோத்திற்கு கோபம் வந்து விடுகிறது.
இதனால் அப்படி தள்ளாதீங்க என பேசிக் கொண்டிருக்கும் பொழுது எப். ஜே அவரை மேலும் கடுப்பாக்குவது போன்று நடந்து கொள்கிறார். கானா வினோத்திற்கு அதிகமாக கோபம் வருகிறது. கோபமாக “ ஏய் புளிப்பே..” என கத்தியப்படி அங்கிருந்து செல்கிறார்.
இது போன்று நாளுக்கு நாள் எப். ஜேவின் உண்மை முகம் வெளி வர ஆரம்பித்துள்ளது.
இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |