Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் எஃப் ஜே மற்றும் ஆதிரை இருவரும் நேற்றைய தினம் வெளியேறிய நிலையில், தற்போது பார்வதி, கம்ருதின் இடையே சண்டை எழுந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். கடந்த வாரம் 13 பேர் இருந்த நிலையில் எஃப் ஜே மற்றும் ஆதிரை இருவரும் வெளியேறினர்.
மைக் மறைத்துக் கொண்டு பேசுவது, படுக்கையறையில் ரகசியம் பேசுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று ரகசியம் பேசுதல் என அனைத்து வேலைகளையும் செய்து வந்த பார்வதி, கம்ருதின் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் ஆதிரையின் பெற்றோர் உள்ளே வருவதாக இருந்த நிலையில், அவர் கடந்த நாட்களில் வெளியேறினார். ஆதலால் அந்த அணியில் இருந்த கனி, கம்ருதின், பார்வதி இவர்களின் பெற்றோரில் ஒரு குடும்பத்தினர் வருவதற்கு பிக்பாஸ் அனுமதிப்பார்.
இதனால் பார்வதி கம்ருதின் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கம்ருதின் பார்வதி தன்னைப் பற்றி திவாகரிடம் பேசியதைக் கொண்டு தற்போது சண்டையிடுகின்றார்.
மேலும் பார்வதியிடம் உங்க அம்மா பெரிய ஐஸ்வர்யாராய் என்றும் பேசியதுடன், இருக்கையை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் இவர்களின் காதல் பிரேக் அப் ஆகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |