நா ஊறுகாய் இல்லை.. பார்வதியிடம் எல்லை மீறிய கம்ருதீன்- இனி சண்டை வெடிக்குமா?
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் கம்ருதீன், பார்வதியிடம் எல்லை மீறி நடந்து கொள்வதாக பார்வதி புதிய குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. அதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுவரையில், 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் ஆதிரை நான்காவது ஆளாக வெளியேறியுள்ளார்.
ஆதிரை- எப். ஜே இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்திய காதல் லீலைகள் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது. இதனை தொடர்ந்து கம்ருதீன்- பார்வதி இருவருக்கும் சிறைக்கு தவறாக பேசிக் கொண்ட காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நா ஊறுகாய் இல்லை..
இந்த நிலையில், திவாகரனிடம் பேசிக் கொண்டிருந்த பார்வதி, “ கம்ருதீன் எல்லை மீறிகிறான். அவனுக்கு என்று ஒரு எல்லை உள்ளது. அதனை மீறி நடந்தால் எனக்கு பிடிக்காது. அவனுக்கு நா ஊறுகாய் இல்லை.. கம்ருதீன் என்னுடைய தோழன்..” என கூறுகிறார்.

இவற்றை கேட்டுக் கொண்டிருந்த திவாகரன், “ நீயும் அவனிடம் கொஞ்சம் கவனமாக இரு.. ” என கூறிக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது கம்ருதீனுக்கு எதிராக இனி பார்வதி விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |