வீடு, 50 லட்சம் பணம்- பரிசுத்தொகைக்கு எவ்வளவு வரி தெரியுமா? போட்டியாளர் உடைத்த ரகசியம்
பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துகுமரன் கிடைத்த பரிசு தொகைக்கான வருமான வரி விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் முத்துகுமரன்
பிரபல தொலைக்காட்சியில் 500 கேமராக்கள் வைக்கப்பட்டு பிரமாண்டமாக ஒளிபரப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது முதல் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அந்த வகையில், எட்டாவது சீசனில் டைட்டில் வின்னராக மேடை பேச்சாளர் முத்துக்குமரன் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு பரிசுத் தொகையாக ரூ.40,50000 வழங்கப்பட்டது.
பிக்பாஸ் டைட்டில் வெல்பவர்களுக்கான பரிசுத் தொகை என்பது ரூ.50 லட்சம். அதில் பணப்பெட்டி டாஸ்க்கில் எடுக்கப்பட்ட ஒன்பதரை லட்சத்தைக் கழித்துவிட்டு மீதித் தொகை முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பணப்பெட்டி டாஸ்கிலும் 50,000 ரூபாயை முத்துக்குமரனே எடுத்ததால் மொத்தத்தில் அவருக்குக் கிடைக்கவிருக்கும் பணம் 41 லட்சமாகும்.
வருமான வரித்துறையினர் விளக்கம்
இந்த நிலையில், ரியாலிட்டி ஷோக்களில் பரிசாகப் பணம் பெறும்போது இதற்கென வரி செலுத்தப்பட வேண்டும் என்பது வருமான வரித்துறையின் சட்டமாக கருதப்படுகின்றது.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “ டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் இந்த மாதிரி வேற எந்த வகையிலாவது பெரிய தொகை பரிசாகக் கிடைக்கும் பொழுது அதுவும் வருமானமாக தான் கருதப்படுகின்றது. அப்படி வருமானமாகக் கணக்கிடும் போது, ஒரு குறிப்பிட்ட தொகை வரி செலுத்த வேண்டும்.
அந்த பணத்தை நாம் ரீ பண்ட் செய்யலாம். நிகழ்ச்சிகளுக்கு உங்களை நீங்கள் எப்படி தயார் செய்துள்ளீர்கள் மற்றும் விளம்பரப்படுத்துவதற்கான செலவுகள் அனைத்தையும் ஒரு ஆவணமாக சமர்பித்து நீங்கள் கட்டிய பணத்தை கிளைம் செய்யலாம்...” என பேசியுள்ளார்.
செந்தில் கணேஷ் உடைத்த ரகசியம்
அத்துடன், சூப்பர் சிங்கரில் டைட்டில் வென்ற செந்தில் கணேஷிடம் அவர் பரிசாக வாங்கிய வீடு குறித்துக் கேட்ட போது, ‘’அருணா பேசியதா நானுமே சில செய்திகள் பார்த்தேன். விஜய் டிவி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை பரிசாக கொடுக்கப்படும் தொகை அல்லது வீடு அவர்கள் கொடுத்து விடுவார்கள்.
அவை கைக்கு கிடைப்பது கொஞ்சம் தாமதமாகும். எனக்கு ஐம்பது லட்சம் மதிப்புள்ள வீடு கிடைத்தது. அதற்காக 15 லட்சம் வரை வரி கட்ட வேண்டி வந்தது. இன்னொரு ஆப்ஷனாக 15 லட்சம் பணத்தை கழித்து விட்டு 35 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டார்கள் நாங்கள் அதையே வாங்கிக் கொண்டோம்...” என பேசியிருந்தார்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |