Bigg Boss: சாச்சனா, மஞ்சரியை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி... பரபரப்பான ப்ரொமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாச்சனா மற்றும் மஞ்சரியை விஜய் சேதுபதி வெளுத்து வாங்கியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் பயங்கர போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விஜய் சேதுபதி போட்டியாளர்களை சரமாரியாக திட்டித் தீர்த்து வரும் நிலையில், இந்த வாரம் அவரது விசாரணை வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பொம்மை டாஸ்கில் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடியுள்ளனர். அதிகமான சண்டையும் நடைபெற்றுள்ளது.
இதனை அவதானித்த விஜய்சேதுபதி கடுப்பில் கொந்தளித்து வருகின்றார். அதாவது பிக் பாஸ் வீடே புயலாகமாறியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் பொம்மையைக் கொண்டு விளையாட சொன்னால் போர்க்களமாக மாற்றியுள்ளனர்... என்னனு இன்னைக்கு பேசுவோம் என்று கூறியுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |