பிக் பாஸில் புதிய தலைவர் தேர்வு : வாக்குகளில் மேலே வந்த மஞ்சரி தட்டி தூக்க நினைக்கும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் 8 இன் ஒன்பதாவது வாரத்தில் "ஏஞ்சல் Vs பேய்கள்ன்" டாஸ்க்கில் போட்டியாளர் மஞ்சரி நாமினேஷன் பாஸை பெற்றுள்ளார். இது வரை வந்த வாக்குகளின் அடிப்படையில் கீழே இருந்த மஞ்சரி தற்போது மேலே வந்துள்ளார்.
பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை கடந்து செல்கிறது. பல வாரங்களின் டாஸ்குகளை முடித்து தற்போது 10து வாரம் ஆரம்பமாக உள்ளது. இதில் போட்டியாளர் ரஞ்சித் தலைவர் பதவியை வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் வாக்குகளின் அடிப்படையிலும் சிறப்பாக விளையாடாதவர்களின் அடிப்டையிலும் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் நோமினேஷன் செய்யப்பட்டவர்களில் யார் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்களோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
மஞ்சரி "ஏஞ்சல் Vs டெமான்" டாஸ்கில் மஞ்சரி அதிக வாக்குகளை பெற்று நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்றுள்ளார். வீட்டினுள் இருக்கும் அதிக போட்டியாளர்கள் மஞ்சரியுடன் பழகுவது மிகவும் குறைவாக இருந்தது.
இதனால் கடந்த சில வாரங்களாக மஞ்சரி மக்களின் வாக்குகளின் அடிப்படையில் மிகவும் கீழே இருந்தார். ஆனால் தற்போது "ஏஞ்சல் Vs டெமான்" டாஸ்கின் மூலமாக இந்த போட்டியில் அதிக நாட்கள் இருந்தவர்களை விட வாக்குகள் அதிகமாக பெற்று முன்னேறி வந்துள்ளார்.
இவரின் இந்த முன்னேற்றம் ஒரு ஆர்வத்தை கொடுத்துள்ளது. தர்சிகா, ஆனந்தி, சாச்சனா மிகவும் குறைவான வாக்குகளை பெற்று மஞ்சரியை காட்டிலும் பினதங்கி உள்ளனர். இவர்களில் தர்சிக்கா எப்படியாவது மேலே வர வேண்டும் என்பதற்காக தற்போது காதல் கன்டன் செய்து வருகிறார்.
சாச்சனா ஆனந்தி சாதாரணமாக உள்ளனர். எனவே இனிவரும் டாஸ்குகளில் சிறப்பாக விளையாடி மஞ்சரியை மூவரும் கீழே கொண்டு வர போகின்றனரா? இல்லை இவர்களை தோற்கடித்து மஞ்சரி முத்துக்குமரனை டார்கட் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |