இந்த வார வெளியேறிய ஆண் போட்டியாளர்.. எவிக்ஷனில் நடந்த Twist
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ஆண் போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 8 பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் ரவீந்தர், அர்னவ், ரஞ்சித், சுனிதா, சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.
அடுத்து சில தினங்களில் ராயன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட் முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரியானார்கள். இவர்களில் அடுத்தடுத்து நடந்த எவிக்ஷனில் ரவீந்தர், அர்னவ், சுனிதா, வர்ஷினி வெங்கட் உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
தற்போது ரஞ்சித், ராயன், ராணவ், பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, தீபக், சௌந்தர்யா முதலான சிலர் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். நிகழ்ச்சி தொடங்கி ஐம்பது நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எந்தவொரு வாரமும் டபுள் எவிக்ஷன் நிகழவில்லை.
தற்சமயம் அதிக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாரம் விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் இறுதி எபிசோட் என்பதால் படப்பிடிப்பு இரவு வரை நீண்டது. கடந்த வாரம் நடந்த சண்டை சச்சரவுகளை விசாரித்து அதற்கான தீர்வுகளை வழங்கியிருந்தார்.
இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்
இதன்படி, இந்த வாரம் எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் ஆர்.ஜே ஆனந்தி, ஜாக்குலின், ராயன், மஞ்சரி, அன்ஷிதா, சிவக்குமார், ரஞ்சித், சத்யா உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.
இவர்களில் குறைவான வாக்குகளை பெற்று நேற்றைய தினம் சிவக்குமார் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவக்குமாரைப் பொறுத்தவரை பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார். பின்னர் அவரின் மனைவிக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த சீசனில் உள்நுழைந்துள்ளார்.
கடந்த நாட்களில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்பதால் மக்கள் மத்தியில் பெரிதாக ரீச் கிடைக்கவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

