நீண்ட பயணத்தின் இறுதி அத்தியாயம்...இன்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே...தவறவிடாதீர்கள்.!!
கடந்த 104 நாட்களாக பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியிட்டவர்களில், 5 பேர் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக இன்று முடிசூடவுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 104 நாட்களை கடந்து இன்று இறுதி கட்டத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
இறுதி வாரத்தில் அர்ச்சனா, மணிச்சந்திரா, மாயா, தினேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக கமல்ஹாசன் முன்னிலையில் அறிவிக்கப்படுவார்.
அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணி முதல் கிராண்ட் பினாலே கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றதும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
இன்று மாலை 6 மணியளவில் கொண்டாட்டங்களுடன் தொடங்கும் பிக் பாஸ் போட்டியின் இறுதி நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கொண்டாட்டங்களின் நிறைவாக வெற்றியாளரும் அறிவிக்கப்படுவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |