காதலை உறுதிச் செய்த பிக்பாஸ் அர்ச்சனா- வெளியில் வந்தவுடன் அப்போ திருமணமா?
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அருண் பிரசாத்
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் அருண் பிரசாத். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 8-ல் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார்.
அருண் கடந்த சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனாவை காதலித்து வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்கில் வெளியில் சென்றவுடன் நற்செய்தி கூறுவேன் என்று கூறினார்.
இதனால் ரசிகர்கள் யாவும் கூடிய விரைவில் அர்ச்சனா - அருண் திருமணம் நடக்க போகிறதா? என கேள்வியெழுப்பி வந்தார்கள்.
காதலை உறுதி செய்த அர்ச்சனா
இந்த நிலையில், இன்றைய தினம் அருண் பிரசாத் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்த தினத்தை முன்னிட்டு பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா, அருணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், “ வாழ்க்கை சில நேரம் கடினமாக தான் இருக்கும். ஆனால் நம்புங்க, நிச்சயமாக ஒருநாள் மாறும். ஹேப்பி பர்த்டே ஹீரோ” என குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படத்தை ரசிகர்கள் அப்போது கூடிய விரைவில் திருமணமா? என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |