கமலை விடுங்க...பிக்பாஸ்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இத்தனை லட்சமா? வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படும் நிலையில், அதற்கு குரல் கொடுப்பவருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் இந்த அளவு பாப்புலர் ஆனதற்கு கமல்ஹாசன் ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் அதில் ஒலிக்கும் பிக்பாஸ் குரலும் தான்.
கணீர் குரலோடு ஹவுஸ்மேட்ஸுக்கு கட்டளையிடுவதாகட்டும், சட்டென ஜாலி மூடுக்கு மாறி போட்டியாளர்களை கலாய்ப்பதாகட்டும் மற்ற மொழிகளைக் காட்டிலும் தனித்து விளங்குகிறார் தமிழ் பிக்பாஸ்.
பிக்பாஸ் எவ்வளவு சம்பளம் வாங்குறார்

சரி இந்த குரலுக்கு யார் சொந்தக்காரர் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும், நம் நெட்டிசன்கள் அது சாஷோ என்பவர் தான் என்பதை எப்படியோ தேடி கண்டுபிடித்து விட்டனர்.
அதன்படி சாஷோவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இதுவரை மாதத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 6-வது சீசனுக்காக ரூ.1 லட்சம் கூடுதலாக, அதாவது மாதத்துக்கு ரூ.6 லட்சம் வாங்குகிறார்களாம்.