இந்த முறை பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்குவது இந்த நடிகையா? இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். அனைத்திலும் செம்ம விறுவிறுப்பாகவே சென்றுகொண்டிருந்தது.
அண்மையில், முடிந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிந்து மாதவி டைட்டிலை வென்றார். தமிழ் பிக்பாஸ் அல்டிமேட்டில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வென்றார்.
இதனையடுத்து, தமிழ் பிக்பாஸ் 5 சீசன்களை கடந்த நிலையில், 6வது சீசன் எப்பொழு என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
6வது சீசனிலும் கமல் தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டாலும், சிம்பு தொகுத்து வழங்கியதும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சமந்தா வருகை
ஆனால், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில், நாகர்ஜூனா 5 சீசன்களை தொகுத்து வழங்கினாலும் படப்பிடிப்பின் காரணமாக 6வது சீசனை தொகுத்து வழங்கமாட்டேன் என கூறியுள்ளார்.
இதனால், யாரை வைத்து 6வது சீசனை தொகுத்து வழங்குவது என குழம்பிய நிலையில், இந்த முறை நடிகை சமந்தாவை வைத்து தெலுங்கு பிக்பாஸை நடத்த உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும், சமந்தா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.
இதனால் சமந்தாவை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.