ஹீரோயினாக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி... ஹீரோ யார்ன்னு தெரியுமா?
பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆன இலங்கை பெண் ஜனனி தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் புகழ் ஜனனி
சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தங்களின் திறமையை வெளிக்காட்டி பலரும் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்படி பிக்பாஸ் நிகழ்சியின் 6வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டவர் தான் ஜனனி.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திராத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்தது.
அப்போது விஜய் உடன் படிப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தற்போது ஜனனி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார். நிழல் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பாக்கியலட்சுமி, மீனாட்சி பொண்ணுங்க சீரியல் புகழ் ஆர்யன் தான் நாயகன் என்ற தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |