பிக்பாஸில் இருந்து வெளியேறிய இலங்கைப் பெண்ணின் உருக்கமான பதிவு!
பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் ஜனனி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
ஆரம்ப வாரம் முதல் ஒவ்வொரு வாரமும் வாக்குகளின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அதேபோல இந்த வாரமும் இலங்கையைச் சேர்ந்த ஜனனி குறைவான வாக்குகளால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து நன்றாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இவர் வெளியேற்றப்பட்டது கவலைக்குறிய விடயமாகும்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமல் அவர் வெளியிட்டுள்ளதாவது,
"பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த போது என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் வாக்குகளால் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி உள்ளீர்கள். உங்களது எதிர்பார்ப்புகளை இத்தனை நாட்களில் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன். மிக்க நன்றி"
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவானது பார்வையாளர்களின் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது.