16 வயதில் ஆயிஷாவுக்கு திருமணம்! இரண்டு முறை Divorce - 3ஆவது காதலர் வெளியிட்ட தகவல்
பிக் பாஸ் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்தாகி விட்டாதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் பேட்டி ஒன்றில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஆயிஷா டிக் டாக் செய்து கொண்டிருந்த மூன்று நான்கு வருடங்கள் என்னுடன் தான் இருந்தார்.
அவரை சீரியலில் அறிமுகப்படுத்தியதே நான் தான். இது பலருக்கும் தெரியும்.
எங்கள் இரண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை. நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.
இடையில் விஷ்ணு வரும்போது தான் எங்களுக்கு பிரிவுக்கு பிரிவு உண்டானது. இப்போது விஷ்ணு ஆயிஷாவுடன் இல்லை என்று கேள்விப்பட்டேன்.
இப்போ யோகேஷ் என்பவருடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் போகும் போது கூட ஆயிஷாவை யோகேஷ் தான் வழி அனுப்பி வைத்தாராம்.
16 வயதிலேயே முதல் திருமணம்
அது மட்டும் இல்லாமல் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணங்கள் ஆகிவிட்டது.
16 வயதிலேயே முதல் திருமணம். அதை மறைத்து தான் அவர் என்னை காதலித்து இருந்தார். சத்யா சீரியல் நடித்துக் கொண்டிருந்த போது அந்த சீரியலின் ஹீரோ விஷ்ணுவையும் காதலித்து இருந்தார்.
பின் அவரை கழட்டிவிட்டார். இப்போது என்னுடைய தங்கையின் காதலன் யோகேஷை காதலித்து வருகிறார் என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.