பிக் பாஸ் புகழ் ராஜுவா இது? மார்டன் உடையில் இளம் ஹீரோவையும் மிஞ்சிட்டாரு!
பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் வெளியிட்டுள்ள போட்ஆடா சூட் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ராஜு கிராமத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர்.
இவர் நடிகர், உதவி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மாடல் என பன் முகம் காட்டி வருகிறார்.
சினிமாவில் அவ்வளவாக ராஜூவுக்கு வாய்ப்பு கிடையாததை அடுத்து சின்னத்திரைக்கு வந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்னும் தொடரில் நடித்தார். சரவணன் மீனாட்சி சீசன் 2, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 இவருக்கு நல்வாய்ப்புகளை அள்ளி கொடுத்தது.
இந்த சீசன் வெற்றியாளராக ட்ராபியை தட்டி சென்றார். தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



