அடுத்த ஜூலியாக மாறிய பிரியங்கா..... அப்புறம்மா லவ் பண்ணு அபிஷேக்கை மிரட்டிய ராஜு! பரபரப்பு ப்ரோமோ
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆனது எப்பொழுதும் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க நேற்றைய தினத்தில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டடது.
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் கூறிய பல போட்டியாளர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து, ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாகி பிரியங்கா அலப்பறை ஓவராக இருக்க, தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில், பிக்பாஸ் அனுப்பிய நோட்டீஸை ராஜு போட்டியாளர்களுக்கு வாசித்து காட்டுகிறார். அதில், குளியலறையிலோ, கழிவறையிலோ கேமரா பொருத்தப்படவில்லை. என சொல்ல அனைவரும் நக்கலாக சிரிக்கின்றனர்.
அதன் பின்னர், அப்புறமா லவ் பண்ணு சொல்லுறத கேளுன்னு, சொல்ல அபிஷேக் மச்சான் என் தலைவன் வருவான் என கூறுகிறார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது எப்படி இன்றைய நாளில் இவர்களின் ஓவர் ஆக்டிங் அப்பட்டமாக தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.