Bigg Boss 10: கூட்டணி சேர்ந்து பெண்கள் போடும் ரகசிய திட்டம்! சிக்கித்தவிக்கும் ஆண் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோவில் பெண்கள் கூட்டணியாக சேர்ந்து பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கை சுவாரசியமாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், இரண்டு நாமினேஷன் ப்ரீ டிக்கெட்டினை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த ஷமா, ஜய்சன் இருவரும் வென்றுள்ளனர்.
வீட்டில் எதிர்கட்சி தலைவராக கடந்த வாரம் முனியம்மா இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் பெண்கள் சிலர் கூட்டணி சேர்ந்து விளையாட்டை இன்னும் சுவாரசியமாக கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர்களின் திட்டம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை தெறிக்கவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
திட்டம் தீட்டிய அடுத்த நிமிடமே அன்சரிடம் சென்று வம்பிழுத்து சண்டையை ஆரம்பித்துள்ளனர். இன்னும் அடுத்தடுத்து என்னென்ன செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |